ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை விதவிதமாக கழித்து வருகின்றனர். அவர்கள் வித்தியாசமாக செய்பவற்றை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன், காபி கப்பில் பால் மூலம் செடி இலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.