கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.