சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்க உள்ளதாகவும், ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாகவே பயணிகள் வர வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 31ம் தேதி வரை, 7 சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.