குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் மகிஷாசுர சம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி கடந்த 30ஆம் தேதி தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. பிரமோற்சவத்தின் 3வது நாளில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலுக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருக்கல்யாணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைகளாகப் பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகளைக் கொண்டுவந்தனர்.
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள், கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா” என்ற கோஷம் முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.