"விசாகா கமிட்டி வேண்டாம் சிபிசிஐடி வேண்டும்"

Sep 01, 2018 11:35 AM 118

தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் பெண் எஸ்.பி. ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீது அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, சீமா அகர்வால் தலைமையில் விஷாகா குழு விசாரித்தது. இந்தநிலையில், பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்த எஸ்.பி., புகாருக்குள்ளான ஐ.ஜி.யை இடமாற்றம் செய்ய வேண்டும், விசாரணை குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து முடிவெடுக்க தங்களுக்கு அதிகாரமில்லை என்பதால், இதனை சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்துள்ளதாக விஷாகா குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், புகாருக்குள்ளான ஐ.ஜி. மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் விஷாகா குழு பரிந்துரை செய்துள்ளது.

Comment

Successfully posted