"தினகரன் தூது விட்டார்" - அம்பலப்படுத்திய அமைச்சர் தங்கமணி

Oct 05, 2018 12:34 PM 813

அதிமுகவுடன் அமமுகவை இணைக்கக் கோரி தினகரன் தூது விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி பேசியதாவது,  "திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் 20 ரூபாய் நோட்டு எடுபடாது என தினகரன் தெரிந்து கொண்டார்.

மக்கள் ஏமாற மாட்டார்கள் என தெரிந்து கொண்டு, இப்போது அதிமுகவிற்குள் கலகம் ஏற்படுத்த தினகரன் முயற்சிக்கிறார். பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி கட்சிக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தி ,

எப்படியாவது இரு சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெறவே தினகரன் இந்த குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்.

தங்க தமிழ்செல்வன் எனக்கு துரோகம் இழைத்தவர், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என கூறியவர் தான் தினகரன்.

தங்கத் தமிழ் செல்வனும் அதிமுகவில் இணை தூது விட்டார். கடந்த  1 மாதத்திற்கு முன்பு தனது கட்சியை அதிமுகவுடன் இணைக்க தயார் என டிடிவி தூது விட்டார். அவரது அழைப்பை ஏற்காததால் இப்போது அதிமுக மீது பொய் பரப்புரை செய்து வருகிறார்." இவ்வாறு அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். 

 

 

Comment

Successfully posted