"மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ வேண்டும்" - முதலமைச்சர் வாழ்த்து

Sep 13, 2018 01:21 AM 577

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி திருநாள் நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், முதலமைச்சர் பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஓம் என்ற பிரணவ மந்திரத்தை திருவுருவமாய் கொண்டுள்ள விநாயகப் பெருமானின் அவதார திருநாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், அவருக்கு பிடித்தவற்றை படையலிட்டும், விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று முதலமைச்சர் வாழ்த்தி உள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளை ஒட்டி மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

Related items

Comment

Successfully posted

Super User

super


Super User

விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்


Super User

Happy Ganesh chathurthi.


Super User

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


Super User

super


Super User

வாழ்த்துகள்


Super User

வாழ்த்துகள்


Super User

mgr...amma....eps...valga...