அதிமுக அரசை போல் தமிழக உரிமைகளை காக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Aug 23, 2021 02:35 PM 473

நீர்வளத்துறையில் தமிழகத்தின் உரிமைகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காத்தது போல், திமுக அரசும் காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசி அவர், வேதாரணயத்தில் 450 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் உணவு பூங்காவின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த நீர்வளத்துறையில், அவர் அறிவித்து கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை ஏற்றுக்கொண்டு, இந்தாண்டு கொள்கை விளக்க குறிப்பில் 75 சதவீதம் சேர்த்திருப்பதால், கொள்கை விளக்க குறிப்பு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை அதிமுக அரசு காத்தது போல், தற்போதைய திமுக அரசும் காக்க வேண்டும் என்று தெரிவித்தார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comment

Successfully posted