"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக காலம் தாழ்த்துகிறது"-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Jun 28, 2021 04:18 PM 659

தென்மாவட்டங்களில் உள்ள கோயில்களை திறக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மீனாட்சி அம்மன், நெல்லை நெல்லையப்பர் கோயில், ராமேஸ்வரம், திருச்செந்தூர் கோயில் உள்ளிட்ட தென் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திறக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி என பல வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் அளித்த திமுக, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

Comment

Successfully posted