“எங்களுக்கு விஜய்தான் பிடிக்கும்”- ட்விட்டரில் பதிவிட்ட குடும்பங்கள்

Jun 12, 2019 11:10 AM 1322

தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக இருப்பவர் நடிகர் விஜய். படத்திற்கு படம் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

விஜய் அடுத்ததாக இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த மாதத்தில் விஜய்யின் பிறந்தநாள் வருவதால் படத்தை பற்றிய தகவல்களை அந்த தினத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்க படக்குழு தயாராகி வருகிறது.

image

இந்நிலையில் திடீரென நேற்றைய தினம் ட்விட்டரில் நடிகர் விஜய்யை மையப்படுத்தி ‘Me-Vijay’ என்ற வார்த்தை ட்ரெண்டானது.

அதாவது நமது வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் யாருடைய ரசிகர்களாக இருப்பார்கள் என்று பார்த்தால் அநேகம் பேரின் தேர்வு நடிகர் விஜய் ஆகவே இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் இந்த வார்த்தை ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

இதன் கீழ் கமெண்ட் செய்துள்ளவர்களில் நிறைய பேர் விஜய் பெயரையே குறிப்பிட்டுள்ளனர். அதற்கேற்ப விஜய்யும் பெண்கள், குழந்தைகள் என குடும்பங்களை கவரும் வகையிலேயே படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

My dad :Mgr My mom:Vijay Brother:Vijay Wife:surya Me:Vijay My son3age: Vijay


Super User

My family members also Anna fan