"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கும்படியாக உள்ளது"

Sep 15, 2021 06:08 PM 891

சென்னை அண்ணா சாலையில், அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, பொய்யான  வாக்குறுதிகளைக் கொடுத்து, அவற்றை நிறைவேற்றாத திமுக அரசு, அதன் தாக்கத்தை உள்ளாட்சித் தேர்தலில் சந்திக்கும் என்று தெரிவித்தார்... 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு இருப்பதாக குற்றம் சாட்டினார். நெல்லை மற்றும் ராமநாதபுரத்தில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய அவர், சட்ட ஒழுங்கு சீராக உள்ளதாக திமுக கூறுவது, கைகொட்டிச் சிரிக்கும்படி உள்ளதாகவும் விமர்சித்தார்... 

 

Comment

Successfully posted