ஸ்மார்ட் போன்களுக்கு சவால்விடும் 6 கேமராவுடன் கூடிய “நோக்கியா 9”

Jul 11, 2019 04:07 PM 327

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான “நோக்கியா 9”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான முதல் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் செல்பி கேமரா உட்பட 6 கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. அதிலும் பின்புறம் உள்ள 5 கேமராக்களில் இரண்டு கேமராக்கள் 12MP RGB சென்சாருடனும், 3 கேமராக்கள் 12MP மோனோகிராம் சென்சாருடனும் இடம் பெற்றுள்ளன.

ரூ.49,999 மதிப்புள்ள இந்த மொபைலை நோக்கியா இணையதளம் மூலம் வாங்குவோருக்கு 5 ஆயிரம் மதிப்புள்ள பரிசுக்கூப்பன், நோக்கியா இயர்போன் உள்ளிட்டவைகளும், HDFC வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ள இதன் ஆன்லைன் விற்பனை வரும் 17ம் தேதி ஆரம்பிக்கிறது.


“நோக்கியா 9” சிறப்புகள்:

Android processor Cpu: குவால்காம் ஸ்நப்டிராகன் 845
Android Version: Android 9.0 Pie
Display Size: 5.9 Inch
RAM: 6 GB
Memory: 128 GB
Front Camera: 20MP
Back Camera: 12MP+12MP+12MP+12MP+12MP
Battery Capacity: 3,320mAh

Comment

Successfully posted