"நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தன"

Sep 14, 2021 03:36 PM 221

நீட் தேர்வு வினாத்தாளில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வை எதிர்கொண்ட நிலையில், தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து 82 சதவீத வினாக்கள் நீட்  தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. 200 வினாக்களில் 37 கேள்விகள் பாடப்புத்தகத்தில் இருந்து வெளியே கேட்கப்பட்டுள்ளன.   வினாத்தாளில், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடுமையாக இருந்துள்ளது. வேதியியலில் கேட்கப்பட்ட 12 கேள்விகள் பாடப்புத்தகத்தில் இருந்து வெளியே கேட்கப்பட்டுள்ளன. இயற்பியலில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில் 42 வினாக்கள் கஷ்டமானவை என்று கல்வி வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் ஒப்பிடும் போது, உயிரியல் பாட 100 கேள்விகளில் 66 கேள்விகள் எளிதாக இருந்துள்ளது என்றும் கேள்விகளைப் புரிந்துகொள்ள நீண்ட நேரம் பிடித்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால், ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளதாக கல்வி வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

 

Comment

Successfully posted