"பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி" திரைப்படம் மே 24ல் வெளியீடு

May 21, 2019 10:34 AM 114

பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படம் வரும் 24ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற படத்தில் மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த படத்தை கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை சுட்டிக் காட்டி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனிடையே தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வரும் 24ஆம் தேதி பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி திரைப்படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Comment

Successfully posted