திருப்பதி ஏழுமலையான் கோவிலில் "ரத சப்தமி விழா" தொடங்கியது!

Feb 19, 2021 07:20 AM 2952

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மினி பிரம்மோற்சவம் என அழைக்கப்படும் ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதிகாலை 5.30 மணி அளவில் சூரிய பிரபை வாகனத்தில் தொடங்கிய இந்த விழா, இரவு 9 மணிக்கு சந்திர பிரபை வாகனத்துடன் நிறைவு பெறுகிறது. கருட வாகனம், சிறிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், சர்வ பூபாலம், முத்து பந்தல் வாகனங்களிலும் மலையப்ப சுவாமி உலா வருகிறார். மதியம் 2 மணியில் இருந்து 3 மணிவரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

 

Comment

Successfully posted