அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலிலிருந்து இந்தியா ரூபாய் நீக்கம் ?

Oct 19, 2018 01:34 PM 351

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ளது. இந்தாண்டு 15 சதவீதம் அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் (TREASURY DEPT) டிரேஷரி டிபார்ட்மென்ட் உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை பட்டியலில் வைத்து கண்காணித்து வருகிறது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். 

ஆனால் கடந்த சில மாதங்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, இந்திய ரூபாயை தனது கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comment

Successfully posted