"கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்"

Oct 13, 2018 03:44 PM 156

கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் ஐந்தாவது தமிழ் சங்கம், இ- தமிழ் சங்கம் எனும் இணைய தள தமிழ்ச் சங்கம் இன்று தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

கீழடியில் 4 முறை நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்சி மூலம் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளதாக கூறிய அமைச்சர் பாண்டியராஜன், ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருட்களை கொண்டு அங்கு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Comment

Successfully posted

Super User

மகிழ்ச்சி தருகிறது தொல் பொருள் அருங்காட்சியகம் அமைக்க அனுமதி பெற்றது செய்தி நமக்கு பெருமை சாற்றும் சான்றுகள் நமது அமைச்சர் முயற்சிகள் மூலம் பல நல்ல அகழ் ஆராய்ச்சி செயல் படுத்த வேண்டுகிறேன்


Super User

சபாஷ்