கிழிந்த ஸ்கிரீனில் திரையிடப்பட்ட "விஸ்வாசம்"

Jan 10, 2019 05:30 PM 292

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. திரையில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் செய்வதறியாமல் கொண்டாடி தீர்த்தனர். தேனியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலையில் படம் திரையிடப்பட்டதுடன் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் ஸ்க்ரீன் மீது ஏறி ஆடியுள்ளனர். இதில் சிலர் ஸ்கிரீன் மீது விழுந்ததில் அது கிழிந்து தொங்கியது. இதனால் கோபமடைந்த தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து தற்காலிக ஒட்டுப் போட்டு படத்தை திரையிட்டது. ஆனால் கடைசி வரை அந்த சம்பவத்தை செய்த ரசிகர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது ரசிகர்கள் தியேட்டர் ஸ்கிரீன் மீது பாலபிஷேகம் செய்து தியேட்டர் நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted