"எந்த மொழியையும் திணிக்க மாட்டோம்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!!

Aug 02, 2020 06:48 PM 553

எந்த ஒரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளன. புதிய கல்வி கொள்கை மூலம் ஹிந்தி திணிப்புக்கு வழிவகை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் பொக்தியால், தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதாகவும், மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் பொக்ரியால் தமிழில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted