`உங்களுக்கு ஒன்னுமே செய்யலியே’ - கண்கலங்கிய வடகொரிய அதிபர்!

Oct 13, 2020 06:11 PM 2048

தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை ராணுவ அணி வகுப்பில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் அந்நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம், தனது உரையை இப்படி ஆரம்பித்தார். ` மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாற்றவில்லை. இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை’ என்று கூறியவர், உடனே கண்ணாடியை கழற்றி, கண்ணீரைத்துடைத்தார். இது அங்கிருப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

image

தந்தை மற்றும் தாத்தாவை மேற்கொள் காட்டி பேசிய கிம், “ இந்த நாட்டை வழி நடத்தும் முக்கிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அதற்கு மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்து, மக்கள் தங்கள் வாழ்கையில் உள்ள சிரமங்களிலிருந்து விடுபடுவதற்கு எனது முயற்சிகளும், நேர்மையும் போதுமானதாக இல்லை” என்று தெரிவித்தார். இந்த உரையை கேட்ட அங்கிருந்த மக்களும், ராணுவ அதிகாரிகளுமே கண் கலங்கினர்.

image

கிம் மக்களின் அனுதாபத்தை பெற உணர்ச்சிவசமாக பேசினார் என்று உரையைக் கணட ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted