குடிசையில் வசித்துவரும் ஏழைச் சிறுவனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது

May 16, 2019 12:56 PM 279

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் குடிசைப்பகுதியில் வசித்துவரும் 11 வயது ஏழைச் சிறுவனுக்கு 19வது நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் குடிசைப்பகுதியில் வசித்துவரும் ஏழைச்சிறுவன் சன்னி பவார். லயன், சிப்பா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவன். சிப்பா படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியாக சன்னி பவாருக்கு நல்ல பெயர் கிடைத்தது.இந்நிலையில் சிப்பா படத்திற்காக சன்னி பவாருக்கு தற்போது, 19வது நியுயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சன்னி பவார், தன்னுடைய பெற்றோரின் ஊக்கத்தால் இந்த விருது கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளான். மேலும் வருங்காலத்தில் ரஜினிகாந்த் போல பெரிய நடிகராக வேண்டும் என்றும் சன்னி பவார் தெரிவித்துள்ளான்.

Comment

Successfully posted