அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Sep 03, 2018 12:40 PM 244

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில் 6ம் தேதி நடைபெறவுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்., அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் ஆர் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம்ஃப் ரக ஏவுகணைகளை வாங்கும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க எச்சரித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted