ஆ.இரா. வெங்கடாசலபதி -இலக்கியப் பங்களிப்புகளின் விரிவும் ஆழமும்

Feb 06, 2019 12:35 PM 249

வரலாற்றறிஞரும், கல்லூரிப் பேராசிரியரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஆ.இரா வேங்கடாசலபதி அவர்கள் தமிழ் எழுத்துலகு மற்றும் பதிப்புலகின் தனிப்பெரும் எழுத்தாளுமை.காலச்சுவடு பதிப்பகம், கடவு பதிப்பகம் மற்றும் தி இந்து இணைந்து இந்த இருநாள் கருத்தரங்க அமர்வை நடத்துகின்றன. புதுமைப்பித்தனின் படைப்புகளைத் தேடுபவர்கள் இந்த பெயரைக்கடக்காமல் தேடல் முடிப்பதில்லை.

எதிர்வரும் பிப்ரவரி 08 மற்றும் 09 ஆகிய இருதினங்களும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில்  ஆ.இரா. வெங்கடாசலபதி அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளின் விரிவும் ஆழமும் என்ற தலைப்பில் இருநாள் தேசியக் கருத்தரங்கமாக நடைபெற உள்ளது.

சரி.எப்படித் திட்டமிடப்பட்டிருக்கிறது இந்த கருத்தரங்கம்?

முதல் நாள்:
முதல் நாள் அமர்வு 8ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி இலக்கிய படைப்புலக ஜாம்பவான்கள் பலரும் ஆற்றும் சிறப்புரைகளுடன் முதல் நாள் அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முதல்நாள் அமர்வில் மகாத்மா காந்தியின் பெயரன் கோபால்கிருஷ்ண காந்தி, கல்வியியலாளர் வே.வசந்தி தேவி , இந்தியா காந்திக்கு பிறகு நூலின் ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோருடன் ஸ்ரீநாத் ராகவன், நிர்மலா லக்ஷ்மணன், டி.எம் கிருஷ்ணா மற்றும் முகம் மாமணி ஆகிய பல்துறை அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர்.

இரண்டாம் நாள்:

இரண்டாம் நாள் நிகழ்வு , தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. காலை 8.45 முதலே தொடங்கும் இந்த நிகழ்வில் 9.30 வரை மாணவர்களுக்கு நூல் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நடைபெறும்.

பின்னர், சரியாக 9.30 க்குத் தொடங்கி அன்று மாலை 7.30 வரை இரண்டாம் நாள் கருத்தரங்கம் நடைபெறும். இடையில் ஒரு 45 நிமிடங்கள் உணவு இடைவேளை நீங்கலாக அந்த நாள் முழுமையும் பெரும் அறிவுத்திரள் கூட்டுக் கூடுகையாக விளங்கபோகிறது இந்த நிகழ்வு.

எறக்குறைய 10 மணி நேரங்கள் நடைபெறவிருக்கும் இந்த கருத்தரங்கம் 6 அமர்வுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அமர்வுகளும் முறையே பங்களிப்பு,மதிப்பீடு,எங்கள் ஆசிரியர், நட்பும் மதிப்பும், ஆங்கிலப் படைப்புகள் மற்றும் ஆளுமை என்கிற பொதுத் தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பெருந்தலைப்புகளின் கீழும் முத்தமிழெழுத்தில் முறைபோகிய வித்தகர்கள் பலர் உரையாற்றவிருக்கிறார்கள். ஒரு பெரும் படைப்பாளி கோலாகலமாக கொண்டாடப்படுவது இலக்கிய உலகில் இன்னும் ஆரோக்கியமான சூழலை வளர்க்கும்.

இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

 

Comment

Successfully posted