இந்த ஆண்டுக்குள் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்?

Aug 28, 2018 03:18 PM 466

வரும் நவம்பர் மாதம் பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தலைவர் தேர்வு நடைபெறும் என்று சிஓஏ தலைவர் வினோத் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிசிசிஐயின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும் முடிவுகள் நேர்மையாகவும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஜாகிர்கான் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் துணை பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவது குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நீதிபதி லோதா குழு பரிந்துரைகளுக்கு சிறிய மாற்றங்களுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted