இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

May 15, 2019 07:18 AM 72

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தற்போதுவரை அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், வடமேற்கு மாகாணத்தின் மினுவாங்கடே பகுதியில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 74 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 3 தீவிரவாத இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டும், ஆள் இல்லா சிறிய ரக விமானங்கள் பறக்கவும் தடை விதித்தும் இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comment

Successfully posted