உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

Jul 16, 2018 03:40 PM 457

தனியார் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றிய சாலினி, நேற்று திண்டுக்கல்லிருந்து நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலினியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஷாலினி குடும்பத்திற்கு, 3 லட்ச ரூபாய்  நிதி உதவி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted