உலகின் மிக வயதான கின்னஸ் சாதனை படைத்த ஜப்பான் பாட்டி காலமானார்

Jul 28, 2018 03:21 PM 460

உலகின் மிக வயதான நபராக இருந்த ஜப்பானைச் சேர்ந்த 117 வயது மூதாட்டி நபி தஜிமா கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து உலகிலேயே அதிக வயதுள்ள நபர் என்ற கின்னஸ் பட்டத்தை சியோ மியாகோ (Chiyo Miyako) பெற்றார். 1901ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி ஜப்பானில் பிறந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிறன்று காலமானார். சியோ மியாகோவை குல தெய்வமாக வணங்குவதாகவும்,  அனைவருடனும் அன்பாகவும், பாசமாகவும் அவர் வாழ்ந்ததாகவும் சியோவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  சியோ மியாகோவின் இறப்பையடுத்து, மசாசோ நொனாகா ( Masazo Nonaka ) உலகின் அதிக வயதானவர் என்ற பட்டத்தைப் பெற உள்ளார். இந்த மூவருமே ஜப்பானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted