உள்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Sep 05, 2018 03:45 PM 140

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் திடீர் மாற்றங்களால் சில தினங்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் உள்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே, கர்நாடகா முதல் குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted