எச்சரிக்கும் வருமான வரித்துறை!

Jul 14, 2018 05:18 PM 431

வருமான வரியை வரும் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமான வரி கணக்கை வரும் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால், ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்திருந்தால் அதனைத் தவறாமல் குறிப்பிட வேண்டும் என்றும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. அத்துடன், வரி செலுத்துவோர் மீது நம்பிக்கை உள்ளதாகவும், பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கம் வருமான வரித்துறைக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted