கல்லணையில் இருந்து விநாடிக்கு 7,235 கன அடி நீர் திறப்பு

Jul 24, 2018 12:43 PM 373

மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், கல்லணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாடிக்கு 7 ஆயிரத்து 235 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 2 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.  இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு  சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளதால், விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted