காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணம் - தமிழ்நாடு காங்.தலைவர் திருநாவுக்கரசர்

Aug 22, 2018 02:21 PM 371

சென்னை தியாகராய நகர் பகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடம் நிவாரணம் திரட்டப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நிவாரண தொகையை திரட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி திரட்டப்பட்டு, கேரள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்தும் நிவாரண உதவிகள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted