காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

May 16, 2019 12:11 PM 62

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணடைந்தார்.

புல்வாமா மாவட்டத்தின் தாலிப்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் உரிய பதிலடி கொடுத்தனர்.

தொடர்ந்து பல மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted