கிரிக்கெட்; இந்தியா அசத்தல் வெற்றி!

Jul 13, 2018 05:36 PM 938

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காம் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 49 புள்ளி 5 ஓவரில் இங்கிலாந்து அணி 268  ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியின் கேப்டன் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சதம் அடித்து அசத்தினார். 40 புள்ளி ஒரு ஓவரில் 2 விக்கெட்டுக்கு இந்திய அணி 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1 க்கு புஜ்ஜியம் என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 14ல் லண்டனில் நடைபெற உள்ளது.

Comment

Successfully posted