கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் - கராத்தே தியாகராஜன் வலியுறுத்தல்

Sep 27, 2020 04:13 PM 321

கொரோனா காலத்தில் அதிக கூட்டத்தை சேர்த்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் என கராத்தே தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா காலகட்டத்தில் தொண்டர்களை தலைவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அதனை செய்ய தவறி விட்டதாகவும் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர், தினேஷ் குண்டு ராவ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் வலியுறுத்தியிருந்தார். தினேஷ் குண்டுராவுடன் நேரடித் தொடர்பில் இருந்த கே.எஸ்.அழகிரி தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் நிகழ்வில் கட்சித் தொண்டர்களுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted