கொடைக்கானல் சமூதாய கல்லூரி நிர்வாகம் மீது புகார்

Jul 25, 2018 12:13 PM 822

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சமுதாய கல்லூரி என்ற பெயரில் பாராமெடிக்கல் படிப்பு தொடர்பான நிறுவனம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வகுப்புகள் எடுக்காமல் ஏமாற்றப்பட்டதாக  மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்களது கல்வி கட்டணம் மற்றும் சான்றிதழ்களை திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல், ஏமாற்றிய கல்லூரியின் நிர்வாக தாளாளர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted