கோவை அருகே கோர விபத்து -7 பேர் பலி

Aug 01, 2018 03:21 PM 480

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வேகமாக வந்த கார், சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்ற ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் விரைந்து, படுகாயமடைந்த 2 பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, படுகாயங்களுடன் ஒருவர் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted