சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Jul 28, 2018 11:48 AM 498

‘யு டர்ன்’. ஹீரோயினை முன்னிலைப்படுத்தி, பவன் குமார் இயக்கத்தில் கன்னட மொழியில் வெளியானது ‘யு டர்ன்’ படம். இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். திலிப் ராஜ் மற்றும் ராதிகா சேத்தன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. இரண்டு மொழிகளிலுமே பவன் குமார் இயக்க, சமந்தா பிரதான கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம், சமந்தாவிற்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் என நம்பப்படுகிறது. ‘செப்டம்பர் 13-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகும்’ என்று சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted