சூப்பர் டீலக்ஸ்... அசலும், நகலும்..

Oct 09, 2018 01:29 PM 484

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு பின் 8 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் படம் என்பதால் இதன்மீது எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

விஜய் சேதுபதி, மிஷ்கின், பஹத் பசில், சமந்தா உள்ளிட்ட பலர் நிற்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. வெளியான சில மணி நேரத்திலேயே திரை ரசிகர்களால் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது. இந்த சூழ்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவே அடுத்து ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

அதாவது சூப்பர் டீலக்ஸ் போஸ்டரில் அப்படியே நகைச்சுவை நடிகர் வடிவேலின் வித்தியாசமான கெட்டப்புக்களை பொருத்தி அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனை போஸ்டர் வடிவமைப்பாள் கோபி பிரசன்னா, தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

வடிவேலு கெட்டப் கொண்ட சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் காட்டுத் தீ என சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது. பொதுவாக தங்களுடைய படங்களை கேலியும், கிண்டலும் செய்தால் சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் இயக்குனர்களுக்கு கோபம் ஏற்படுவதுண்டு.

ஆனால் தியாகராஜன் குமாரராஜாவோ தம்முடைய படத்தை தானே கிண்டல் செய்து போஸ்டர் வெளியிட்டதும், அந்த போஸ்டர் வரவேற்பு பெற்றுள்ளதும் தமிழ் சினிமாவுக்கு புதிது.

Comment

Successfully posted