சூர்யாவோட ‘என்.ஜி.கே.’ செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Jul 28, 2018 11:45 AM 218

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்கள்.  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘என்.ஜி.கே’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ‘என்.ஜி.கே.’ என்றால் என்ன என்பதற்கான விளக்கமும் அதில் தரப்பட்டுள்ளது. ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம் தான், . ‘என்.ஜி.கே“. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.’ ‘என்.ஜி.கே.’வின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா, அதேசமயத்தில் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் தற்போது தொடங்கியுள்ளது.

Comment

Successfully posted