சைக்கிள் போட்டி - மாணவர்கள் ஆர்வம்

Sep 13, 2018 08:19 PM 137

நாகையில் நடந்த சைக்கிள் போட்டியில் மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலக்கை எட்டிப்பிடித்தனர். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியரின் வயதுக்கேற்ப பந்தய தூரங்கள் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா முன்னிலையில், நாகை சைக்கிள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

Comment

Successfully posted