சைரா நரசிம்ம ரெட்டி படத்தை பார்த்த வெங்கையா நாயுடு

Oct 17, 2019 01:50 PM 94

டெல்லியில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி படத்தின் சிறப்புத் திரையிடலில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி திரைப்படம் திரையரங்கங்களில் ஓடிப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதனை வெங்கையா நாயுடு கண்டுகளித்தார்.

Comment

Successfully posted