டிடிவி தினகரன் கனவு பலிக்காது - அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

Sep 18, 2018 09:13 AM 343

அதிமுக என்கின்ற ஆலமரத்தை சாய்க்க நினைக்கும் டிடிவி தினகரனின் கனவு பலிக்காது என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அண்ணாவின் புகழையும், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள், அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கினார்.

அதிமுக என்ற ஆலமரத்தில் இளைப்பாற வந்த தினகரன் அதனை வேரோடு அழிக்க நினைக்கும் கனவு பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, கழக அமைப்புச் செயலாளர் முக்கூர் என்.சுப்ரமணியன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted