டெல்லியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம்

Aug 28, 2018 12:39 PM 408

பாஜக ஆளும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்தநிலையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பாகவும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்க, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் சில மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

Comment

Successfully posted