தனுஷின் பிரமாண்டத்தில் இணைந்தார் அனு இமானுவேல்

Sep 17, 2018 06:52 PM 206

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட தனுஷ், பவர்பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சரித்திர படமொன்றை இயக்கிவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ். ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

தற்போது இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் மிஷ்கின், விஷால் கூட்டணியில் வெளிவந்த துப்பறிவாளன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனு இம்மானுவேல்.

அமெரிக்காவில் பிறந்து, மளையாளத்தில் முதலில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் தெலுங்கு இரண்டிலும் பிரபலமாகி வருகிறார்.

Related items

Comment

Successfully posted