தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் வேலுமணி பதில்!

Sep 12, 2018 12:40 PM 379

தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

மின்வெட்டு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த வேலுமணி, தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக விளக்கம் அளித்தார். உள்ளாட்சித் துறையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.  ஆர்எஸ். பாரதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உறுதிபடக் கூறினார்.

Comment

Successfully posted

Super User

உண்மை