தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்த ஈரான் கடற்படை

Sep 03, 2018 12:33 PM 234

தமிழகத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்வது வழக்கம். குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்கள் கணிசமான அளவில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.இந்த நிலையில் துபாய் நாட்டு நிறுவனத்துக்காக மீன் பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதியை சேர்ந்த பூமி,பால்குமார்,சதீஷ்,துரைப்பாண்டியன்,அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 5 பேரும் ,தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த மில்டன் என்பவரும் ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரையும் பத்திரமாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comment

Successfully posted