தர்பார் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரனின் மகன்

Apr 17, 2019 12:58 PM 157

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இணைந்துள்ளார். பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் போலீஸ் கமிஷனராக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கிய இயக்குநராக கருதப்படும் மகேந்திரன் கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், தர்பார் திரைப்படத்தில் அவரின் மகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

Comment

Successfully posted