திருச்சி வரலாற்று சிறப்புமிக்க வீரப்பூர் கோவிலில் வேடபரி வழிபாடு

Mar 14, 2019 07:08 AM 79

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வீரப்பூர் கோவில் வேடபரி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் கன்னிமாரம்மன், பெரியகாண்டியம்மன், பொன்னர்-சங்கர், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி சாமி கோவிலில் பெருந்திருவிழா கடந்த 6 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி வழிபாடு வெகு சிறப்பாக நடந்தது.

இதில் கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், பூ மாலை அணிவித்து தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted