தேர்தலை கண்டு பாஜக நடுங்க தொடங்கிவிட்டது-காங்கிரஸ் கிண்டல்

Oct 04, 2018 10:55 PM 171

 

அதிகரித்துவரும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அமித் ஷா , மக்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை என்றார்.

விலை குறைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த 2014-ம் ஆண்டு இருந்ததுபோல் மோடி அரசால் குறைக்க முடியுமா ?என கேள்வி எழுப்பினார்.

அற்பமாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் குறைப்பது முறையல்ல என்று கூறிய அவர், மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். எதிர்வரும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத்தான் பாஜக அரசு வரியைக் குறைத்துள்ளது என்றார் அவர்.
மேலும் பெட்ரோல் டீசல் விலை மூலம் சொந்த நாட்டு மக்களையே பாஜக அரசு கசக்கிப்பிழிகிறது என ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted