நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த தமிழ் நடிகர்! கொந்தளித்த தெலுங்கு திரையுலகம்!

Sep 17, 2018 06:53 PM 326

பிரின்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் மகேஷ் பாபு, தெலுங்கு திரைத்துறை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழில் நேரடியாக எடுக்கப்பட்டது.

தமிழ் தொலைக்காட்சிகளில் காமெடியனாக வரும் மனோஜ் பிரபாகர், அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபுவையும் இந்தி நடிகை காத்ரீனா கைப்பையும் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார். “நடிகர் மகேஷ் பாபுவும் காத்ரீனா கைப்பும் ஒன்று. இருவருக்கும் நடிக்கவே தெரியாது. எல்லாக்காட்சிகளிலும் முகத்தை ஒரே மாதிரி வைத்திருப்பார்கள். அண்மையில் வெளியான ஸ்பைடர் திரைப்படத்தில் நீங்கள் உற்றுப்பார்த்தால் தெரியும். ஹீரோ மகேஷ் பாபுவை விட வில்லன் எஸ்.ஜே சூரியா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திருப்பார்" இவ்வாறு கிண்டல் செய்திருந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த தெலுங்கு ரசிகர்கள் பதிலுக்கு மனோஜ் மட்டுமின்றி தமிழ் ஹீரோக்களையும் சேர்த்து கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். இது தெலுங்கு நடிகர் சங்கமான “மா விடம் சென்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் மனோஜ் மன்னிப்பு கேட்க வேண்டும், என மா கோரிக்கை விடுத்திருந்தது. இது குறித்து விளக்கமளித்த தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் விஷால், மகேஷ் பாபு எப்படிப்பட்ட பண்பு உடையவர் என்பது இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். மனோஜ் பிரபாகர் என்ற பெயரில் எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் தவிர வேறு யாரையும் தெரியாது. எனவே பிரபலமாவதற்காக இவ்வாறு சிலர் பேசுவதை மகேஷ் பாபு ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இறுதியாக மகேஷ் பாபு ரசிகர்களிடம் மனோஜ் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related items

Comment

Successfully posted